பாக்கு வெட்டி
தமிழர்களின் பாரம்பரியமான உணவு வகைகளில் வெற்றிலை பாக்கு மிக முக்கியமானது.
இவை ஏப்படிப்பட்ட விருந்தை உண்டாலும் ஜீரணம் செய்யவல்லது. அக்காலத்தில் வயதானவர்கள் வாயிலிட்டு மெல்ல முடியாதவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட உரலில் இடித்து சுவைப்பார்கள். வெற்றிலையோடுகூட பாக்கை சேர்த்துக் கொள்ளுவார்கள். பாக்கு கடினமாக இருப்பதனால் அதனை வெட்ட பாக்கு வெட்டிகளைப் பயன்படுத்துவார்கள்.
உறுதியான அடிப்பகுதியையும் கூர்மையான பதம் உள்ள மேற்பகுதியையும் கொண்ட கத்திரி போன்ற சாதனம் அது. ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப அவைகளை இரும்பு மற்றும் பித்தளையில்
வைத்திருப்பார்கள். வெற்றிலை பாக்குகளுடன் சுண்ணாம்பு சேர்ப்பார்கள். சுண்ணாம்புகளை வைப்பதற்காக சிறப்பான சுண்ணாம்பு டப்பிகளை பயன்படுத்துவார்கள். வெற்றிலை பாக்கோடு புகையிலையையும் பயன்படுத்துவார்கள் அது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் அதனால் சிலரே இதைப் பயன்படுத்துவார்கள். இந்த பொருட்கள் அனைத்தையும் வைப்பதற்கு சுருக்குப்பை அல்லது வெற்றிலை பெட்டி பயன்படுத்துவார்கள்.

இன்று புழக்கத்திலிருந்து மறைந்துப்போன பொருட்களில் இதுவும் ஒன்று.
வெற்றிலை பாக்கு போட்டால் பாம்பு கொத்தும்,மாடு மட்டும், கோழி கொத்தும், படிப்பு வராது என்று பொய்யான கூற்றை நம்பி...,நம் பாரம்பரிய வீழ்ச்சியை இழந்து கொண்டு இருக்கும் நம் மக்களுக்கு , விஞ்ஞான வளர்ச்சி என்று நம்பி நம் பழக்கவழக்கங்களை இழந்துகொண்டு இருக்கின்றோம் என்று தெரியவில்லை......
அடுத்த தலைமுறைக்கு காண்பிப்பதற்கு என்னுடைய சேகரிப்பில் பாக்கு வெட்டியை வைத்துள்ளேன்..